தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக அச்சம்- அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக தினந்தோறும் நீதிமன்றத்தை நாடி வருவதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதிகளில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதாரித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அமைச்சர், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் தேர்தலான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, திமுக அஞ்சுகிறது என்று குற்றம் சாட்டினார். உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த, திமுக தினந்தோறும் நீதிமன்றத்தை நாடி வருவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சனம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மக்களுக்கு 3 செண்ட் நிலம் தருவதாக, அரவக்குறிச்சி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அளித்த வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினர். அதிமுக வேட்பாளர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை உணர்ந்து, அவற்றை கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரசாரம் செய்தார்.

Exit mobile version