தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த திமுக முயற்சி- அமைச்சர் சி.வி.சண்முகம்

தேர்தல் என்றாலே திமுக தலைவர் ஸ்டாலின், பயந்து நடுங்குவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் சி.வி.சண்முகம் பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்த திமுக போராடி வருவதாக தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறிய அமைச்சர் சி.வி.சண்முகம், மக்களை சந்திக்க திமுக அச்சப்படுவதாக தெரிவித்தார். தேர்தல் என்றாலே திமுக தலைவர் ஸ்டாலின், பயந்து நடுங்குவதாகவும், உலகத்தில் இருக்கும் அனைத்து மொழிகளிலும் ஸ்டாலினுக்கு பிடிக்காத ஓரே வார்த்தை தேர்தல் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்தார்.

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Exit mobile version