யமஹா FZ பைக்குகளில் கோளாறு: இலவச சேவையைப் பெறலாம் என அறிவிப்பு

முன்னணி பைக் நிறுவனமான யமஹாவின்  FZ மாடல் பைக்குகளில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்து தருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

FZ பைக்குகளில்  எஃப்.ஐ மற்றும் எஸ் எஃப்ஐ ஆகிய மாடல்கள் அக்டோபரிலிருந்து தயாரிக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்த பைக்குகளில் பின்பக்க  ரிஃப்ளக்டரில் கோளாறு இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து அந்நிறுவத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.

இதனையடுத்து யமஹா நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 7,757 பைக்குகளில் இத்தகைய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், தாமாக முன்வந்து இதனை தீர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது. மேலும் வாடிக்கையாளா்கள் அங்கீகரிக்கப்பட்ட யமஹா விற்பனையாளர்களை அணுகி  இந்த சேவையை இலவசமாக பெறலாம் என தெரிவித்துள்ளது.

Exit mobile version