மாமனார், மாமியாரை சரிவர கவனிக்காத மருமகன், மருமகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பெற்றோர், மூத்த குடிமக்கள் ஆகியோரை பராமரிப்பதற்கான சட்டம், 12 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. இதில், மாமனார், மாமியாரை சரியாக கவனிக்காத மருமகனுக்கும், மருமகளுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட இதற்கான மசோதாவில், வயதானவர்களின் பராமரிப்பு செலவின் உச்சவரம்பு 10 ஆயிரம் ரூபாய் என்பது நீக்கப்பட்டுள்ளது. அதிகம் சம்பளம் பெறுவோர் முதியோர்களுக்கு அதிக தொகை கொடுக்க வேண்டும் என்றும் அதனை மீறுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.