திருச்சுழியில் நெல் சாகுபடி பாதிப்பு – விவசாயிகள் கவலை

திருச்சுழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயிர்கள் சேதமதிப்பைக் கணக்கிட்டு அதற்கேற்ப உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வேளாண்மைத்துறை மூலம் மாற்று விவசாயத்திற்கான விதைகள், உரங்கள் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version