கடையநல்லூரை அருகே போதிய நெல் விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது பருவமழை பொய்த்துவிட்டதாலும் பூச்சிகளின் தாக்குதலாலும், விளைச்சல் குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு 34 மூடை நெல் அறுவடை செய்து வந்த நிலையில், இந்த வருடம் ஒரு ஏக்கருக்கு 24 மூடைகள் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். அதேசமயம் மூட்டைக்கு வெறும் ஆயிரத்து 200 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், இதனால் தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.