பருவநிலை மாற்றத்தின் காரணமாக மூணாறு பகுதிகளில் பயிரிடப்பட்ட முட்டைகோசில் புதுவித நோய் தாக்கியதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள முட்டைகோசில், புதுவித நோய் தாக்கி வருகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நோய் தாக்குதல் உள்ளதாகவும், இதனை சரி செய்வதற்கு பலவித பூச்சிகொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்தி உள்ளனர். ஆனாலும், நோய் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை காக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.