இலவங்காய்களை புழுக்கள் தாக்குவதால் விவசாயிகள் கவலை

தேனி மாவட்டத்தில் இலவங்காய்கள் அமோகமாக விளைந்துள்ள நிலையில், புழு தாக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி, தேவாரம்,கோம்பை ,கம்பம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இலவ மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், இலவங்காய்களை புழுக்கள் தாக்கத் தொடங்கியுள்ளன. இதனால் காயின் வெளிப்பகுதியில் கருப்பு நிறத்தில் புள்ளி புள்ளியாக வந்து நோய் தாக்குதலுக்கு ஆளானது போல் உள்ளது. மேலும் மரத்தின் பட்டை வழியாக புழுக்கள் உள்ளே நுழைந்து மரத்தை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். தோட்டக்கலைத் துறையினர் விரைந்து வந்து மரங்களை பார்வையிட்டு அந்த புழுக்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version