ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மலையையொட்டி உள்ள பகுதியான இங்கு, ஏராளமானோர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்குள்ள விவசாயிகள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் அமைத்து அதன் மூலம் விவசாய தேவைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். சொட்டு நீர் பாசனம், பாதுகாப்பு வேலி போன்ற பல்வேறு தேவைகளுக்கு இந்த மின்சாரத்தை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது குறித்து விவசாயிகள் மத்தியில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக்கூறும் அப்பகுதி விவசாயிகள், சோலார் மின்சாரம் பயன்பாடு அதிகரித்தால் எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு குறையும் என நம்பிக்கை தெரிவித்தனர்.