பசுமைக் குடில் விவசாயத்தால் அதிகளவு மகசூல் பெறும் விவசாயிகள்

பசுமை குடில் அமைத்து பாகற்காய் பயிரிட்டால் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணத்தூரை அடுத்த ஆரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் மற்றும் பல விவசாயிகள், தங்களுடைய இடங்களில், பசுமைக் குடில் அமைத்து, அதில் பாகற்காய் பயிரிட்டு வந்துள்ளனர். 40 நாட்களுக்கு பிறகு, காய் வரத் தொடங்கிய பின், ஒரு நாள் விட்டு ஒரு நாள் 100 கிலோ அறுவடை செய்யப்பட்டு, அவை திருவண்ணாமலை மற்றும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்பட்டது. அப்போது, ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை ஆனதால், செலவினங்கள் போக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை லாபம் கிடைத்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பசுமைகுடில் அமைத்து விவசாயம் செய்வதால் அதிக மகசூல் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version