காற்று மாசு ஏற்படும் வகையில் வைக்கோலை எரித்த அரியானா மாநில விவசாயிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் புகைமூட்டத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அங்குவாழும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் காற்று மாசடைவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரியானா மாநில விவசாயிகள் வைக்கோலை எரிப்பதே காற்று மாசடைவதற்கு முக்கியக் காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. இதனடிப்படையில், அம்பாலா பகுதியில் வைக்கோலை எரித்த விவசாயிகள் 50 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விவசாயிகளுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.