கிருஷ்ணகிரியில் தசரா மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரிய ஒட்டுரக செண்டுமல்லி வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொய்மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற பருவநிலை உள்ளது. மேரிகோல்ட் என்று அழைக்கப்படும் செண்டுமல்லி வகை பூக்களுக்கு, அதிக வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் இவற்றை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு செடியில் இருந்து இரண்டு கிலோ அளவுக்கு பூக்கள் கிடைப்பதால் ஒரு ஏக்கரில் 14 ஆயிரம் கிலோ அளவுக்கு அறுவடை செய்ய முடியும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ செண்டுமல்லி 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக லாபம் கிடைப்பதால், சூளகிரி, ராயக்கோட்டை வேப்பனப்பள்ளி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் செண்டு மல்லியை சாகுபடி செய்துள்ளனர்.