ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு, அரசு நல்ல திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை அறிவித்தார். அதன்படி, 5 மாவட்டங்களில்ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூரில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, 100 ஏக்கரில் மாதிரி பண்ணை அமைக்க, மானியத் தொகையுடன் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், இத்திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். தமிழக அரசுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டனர்.