கல்லணை கால்வாயில் மந்தமாக நடைபெறும் தூர்வாரும் பணிகள், ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா?

கல்லணை கால்வாய் வாய்க்காலில் நடைபெறும் பணிகளை விரைந்து முடித்து, ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.

தண்ணீர் திறந்து விட இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு திட்டத்தில் மானியம் மற்றும் உரங்களை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version