சாயல்குடி கண்மாயில் உள்ள கருவேல மரங்கள் அகற்றம் : தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பெரிய கண்மாயில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய கண்மாயாக உள்ளது சாயல்குடி பெரிய கண்மாய். 495 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாதால் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்களாக ஆக்கிரமித்துள்ளது.

இதனால் பருவமழை காலங்களில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக புணரமைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், வருங்காலங்களில் விவசாயம் செழிக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Exit mobile version