சின்னசேலம் அருகே விவசாயிகள் பயனடையும் வகையில் இலவச டிராக்டர் வழங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலம் அருகே உள்ள வெட்டி பெருமாளகரம் பகுதியில் ஏழை விவசாயிகளுக்கு டிராக்டர் வசதி செய்து தர தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அரசு, தோட்டக்கலை துறை சார்பில் மானிய விலையில் டிராக்டர்கள் வழங்கி உள்ளது. அதன்படி விவசாயிகள் தேவைக்கேற்ப டிராக்டரை விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்துள்ள விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post