கொண்டைக் கடலை சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லை – விவசாயிகள் வேதனை

தமிழகத்தில் பனிப்பொழிவு நிலவிய பொழுதிலும் கொண்டைக் கடலை சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லை என திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டி, வட்டப்பாறை, கோனூர் உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட ஹெக்டேரில் கொண்டைக்கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் கொண்டைக் கடலை விளைச்சல் அதிகளவில் இருக்கும். ஆனால் பனிப்பொழிவு நிலவிய பொழுதிலும் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டை போலவே ஒரு மூட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தந்து வியாபாரிகள் வாங்கி செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது செலவு செய்த பணத்திற்குகூட ஈடு செய்ய முடியாத அளவில் உள்ளதாகவும் அவர்கள் கூறினர். 

Exit mobile version