புடலங்காய் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புடலங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

செங்கத்தை அடுத்த பொரச்சப்பட்டு கிராமத்தில் பனிபொழிவு அதிகமாக இருப்பதால், புடலங்காய் பயிர்களை நோய் தாக்கியுள்ளது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வேறெந்த தொழில்களையும் நம்பி இல்லாததால் விவசாயம் தவிர வேறு எந்த வருமானமும் இல்லாமல் தவித்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version