வறட்சியின் காரணமாக பப்பாளி தோட்டங்கள் காய்ந்து வருவதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஊத்தங்கரை, மூன்றம்பட்டி, மாரம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருமளவு விவசாய நிலத்தில், ஏராளமான விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இந்த பப்பாளி மரங்கள் பராமரிக்கப்பட்டு, தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நேரத்தில் அங்கு போதிய மழை மற்றும் நிலத்தடி நீர் இல்லாமல், கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் காய்கள் சிறுத்து, மகசூல் குறைந்து, செடிகள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.