வெள்ளைப் புழு தாக்குதல் பனிப்பொழிவு போன்றவற்றால் சின்ன வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மாவட்டமாக பெரம்பலூர் திகழ்கிறது. அம்மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலத்தூர், செட்டிகுளம், பாடாலூர், குரும்பலூர், அம்மாபாளையம், சத்திரமனை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது திருகல் என்ற ஒரு வகை நோய் தாக்குதலினாலும், வெள்ளைப் புழு மற்றும் பனி காலத்தினாலும் சின்ன வெங்காயம் அதிகளவு பாதிப்பை சந்திப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.