கர்நாடகாவை அதிரவைத்த விவசாயிகளின் மனித சங்கிலி போராட்டம்

கர்நாடகா மாநிலத்தில் விவசாயிகள் 8 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலி போராட்டம் நடத்தியது மாநிலம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய குமாரசாமி அரசு விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு, உரிய தொகை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையொட்டி, கர்நாடகாவில் உள்ள ஆனைக்கல் மாவட்டத்தில் உள்ள தொம்மசந்திரா என்னுமிடத்தில் இருந்து, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 8 கிலோ மீட்டர் தூரம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே உருவ பொம்மைகளை எரித்தும், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Exit mobile version