வேளாண்பெருமக்கள் நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும்: முதலமைச்சர்

வேளாண் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையினை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்தும், கல்லணையில் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, நேரடி நெல் விதைப்பு மூலம் 40 முதல் 45 டி.எம்.சி நீர் சேமிக்கப்படுவதாகவும், இதற்காக கோ 50, ஏடிடி 50 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்மை துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியினை ஊக்குவிக்க, ஏக்கருக்கு 600 ரூபாய் வீதம் உழவு மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதற்காக மாநில அரசு 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version