ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் 6 ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின், பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 4 மாதங்களுக்கு ஒருமுறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. இதனைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேதியை நவம்பர் 30ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாகவும், இந்த திட்டத்தின் மூலம் 7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைய உள்ளாதாக கூறினார்.

Exit mobile version