கிருஷ்ணகிரியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கே.ஆர்.பி.அணை, அம்மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளை கடந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இடதுபுறம் உள்ள முதல் மதகு உடைந்தது. இதையடுத்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக மதகு அமைக்கப்பட்டது. மேலும், முழு கொள்ளளவில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாததால், எட்டு மதகுகளையும் புதிதாக மாற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. புதிய மதகு அமைக்க சுமார் 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தார். இதனையடுத்து, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள், 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைய உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Discussion about this post