மஞ்சள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தகவல்

பொங்கல் பண்டிகையையொட்டி ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் கொத்துகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பொங்கலுக்கு தேவையான பொருட்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. பொங்கல் தினத்தில், மிக முக்கிய பொருளாக கருதப்படும் மஞ்சள் கொத்துக்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பரமக்குடி அருகே வைகை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள மஞ்சள்பட்டினத்தில், விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மஞ்சள் கொத்துக்கள் சாகுபடி செய்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் 200 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். வடகிழக்கு பருவமழை கைக்கொடுத்த நிலையில், நன்கு வளர்ந்து பூமிக்கு கீழ் மஞ்சள் கிழங்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. மகசூல் அதிகரித்துள்ளதால், நல்ல லாபம் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version