கடைமடை பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்

கடைமடை பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்துவரும் நிலையில், நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக கடைமடை பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் குருவை சாகுபடி முற்றிலும் பொய்த்துப் போனது. இந்நிலையில் அவ்வபோது விட்டு விட்டு பெய்து வரும் மழையால், நாகை விவசாயிகள் உழவு மேற்கொள்ளும் பணியை துவக்கியுள்ளனர்.

பாலையூர், செல்லூர், சிக்கல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில், புழுதி ஓட்டும் பணி எனப்படும், நிலத்தை பண்படுத்தும் பணியை, விவசாயிகள் துவக்கியுள்ளனர். மேட்டூர் அணைக்கு வந்துள்ள காவிரி நீர், ஆகஸ்ட் மாதத்திற்குள் கடைமடை பகுதிக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கையோடு உழவு பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version