துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் விவசாயிகள் சந்திப்பு

உசிலம்பட்டியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை 58 கிராம விவசாய பிரதிநிதிகள் சந்தித்து தண்ணீர் திறப்புக்காக நன்றி தெரிவித்தனர்.

மதுரையில் இருந்து தேனி சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை உசிலம்பட்டி தேவர்சிலை முன்பாக 58 கிராம கால்வாய் விவசாயிகள் சந்தித்து கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டதற்கு நன்றி தெரிவித்தனர். விவசாயிகளுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 58 கிராம கால்வாயில் நீர் திறக்க நிரந்தர அரசாணை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுமென விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வின்போது,  உசிலம்பட்டி அதிமுக நகரச் செயலாளர் பூமாராஜா, வழக்கறிஞர் லட்சுமணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Exit mobile version