மரிக்கொழுந்து சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

குறைந்த செலவில் அதிக லாபம் கிடைப்பதால் மரிக்கொழுந்து சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரிக்கொழுந்து வாசத்திற்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது மரிக்கொழுந்து. மாலை கட்டுவதில் தொடங்கி வாசனை திரவியங்கள் தயாரிப்பது வரை மரிக்கொழுந்து பயன்பாடுகள் அதிகமாக உள்ளது. குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் கிடைப்பதோடு, பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மரிக்கொழுந்து சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

100க்கும் மேற்பட்ட ஏக்கரில் மரிக்கொழுந்து பயிரிட்டுள்ள விவசாயிகள், அங்கிருந்து கட்டுகளாக தயார் செய்து வியாபாரிகள் மூலம், பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு கட்டு 30 ரூபாய் வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Exit mobile version