நெல்லை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பிசான சாகுபடி பணிக்காக நாற்று நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள செங்கோட்டை, தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனையடுத்து ஆண்டு தோறும் நவம்பர் மாதம் இறுதியில் பிசான சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கும் நிலையில், தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நவம்பர் முதல் வாரத்திலேயே விவசாயிகள் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர்.
விவசாய பணிகள் அனைத்தும் இயந்திர மயமாகி வரும் நிலையில், நாற்று நடும் பணியில் அதிகளவில் பெண்களே ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மகசூல் அதிகளவில் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.