நீலகிரி மாவட்டத்தில் மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியதால் விவசாயிகள், தங்கள் விவசாய பணிகளை துவங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வாரகாலமாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக விவசாய வேலைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் நீலகிரி விவசாயிகள் தங்கள் பணிகளை துவங்கியுள்ளனர். அதிக அளவு மழையால் பாதிக்கப்பட்ட அவலாஞ்சியில் உள்ள பாரதி நகரில் வசிக்கும் விவசாயிகள் வயல்களுக்கு சென்று சாகுபடி பணிகளில் ஈடுபட்டனர். பீட்ரூட் காய்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள், நல்ல விலைக்கு விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.