கீழ்பென்னாத்தூர் அருகே பாகற்காய் சாகுபடியில் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஊத்தங்கால் கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் பாகற்காய் பயிரிட்டுள்ளனர். தற்போது பாகற்காய் விலை உயர்ந்து காணப்படுவதால் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 6 மாத பயிராக பயிரிடப்படும் பாகற்காய்க்கு குறைந்த அளவு தண்ணீர், உரம் இருந்தாலே போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினந்தோறும் ஒரு ஏக்கரில் 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்யப்படும் இந்த பாகற்காய்கள் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெடுக்கு அனுப்பப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு இவை 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. செலவினங்கள் போக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Discussion about this post