தமிழக அரசு, மானியத்துடன் செயல்படுத்தி வரும் கறவை மாடு திட்டம் பயனுள்ள வகையில் உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் விவசாயத்துடன் சார்ந்த கறவை மாடு வளர்க்கும் திட்டத்தை மானியத்துடன் அளித்து வருகிறது. தமிழகத்தில் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில், எசனை கிராமத்தில் வசித்து வரும் ராஜேந்திரன் என்ற விவசாயி, தமிழக அரசின் கறவை மாடு திட்டத்தின் கீழ் பயன் பெற்று கணிசமான வருமானம் ஈட்டி தனது பொருளாதாரத்தை பெருக்கி வருகிறார். ஒரு கறவை மாட்டிற்கு 6 ஆயிரம் வீதம் தமிழக அரசின் மானியத் தொகையுடன் 10 கறவை மாடுகளை வளர்க்கும் தொழிலை தொடங்கிய இவர் , தற்போது 25க்கும் மேற்பட்ட மாடுகள் மூலம் கணிசமாக வருமானத்தை பெற்று வருகிறார். கறவை மாடு வளர்ப்பு மூலம் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் வரை லாபம் ஈட்டுவதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் விவசாயி ராஜேந்திரன்.