ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் கீழ்பவானி கால்வாயின் மூலம் பாசனம் பெற்று வரும் பகுதிகளில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பவானி சாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரால் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் விவசாய பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் பருவ மழை பொய்த்து போனாதால் வறட்சி காரணமாக விவசாய பணி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டு மழை தேவைகேற்ப பெய்ததால் பவானி சாகர் அணை முழுவதுமாக நிரம்பியது. இதனையடுத்து அணையில் இருந்து, கீழ்பவானி கால்வாய் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இந்த நிலையில், அங்கு நெல் நடவு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.