புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆண்டுகளாகக் கடும் வறட்சியால் கரும்பு விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு பயிரிட்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணி மூலம் குளங்கள், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பெய்த மழையால் தூர்வாரப்பட்ட அனைத்து நீர் நிலைகளிலும் நீர் நிறைந்து காணப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கரும்பு நல்ல விளைச்சலைக் கண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகத் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.