வெண்டைக்காய் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

கடையநல்லூரில் வெண்டைக்காய்க்கு அதிக விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் அதிகரித்துள்ளதாக வெண்டைக்காய் பயிரிட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்ற ஆண்டை விட இந்தாண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெண்டைக்காய் ஒரு கிலோ தற்போது 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாவதாகவும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version