சவுக்கு சாகுபடி மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது: விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் சவுக்கு சாகுபடி மூலம் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் விவசாயிகள் சவுக்கை பெருமளவு பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். சவுக்கு பயிரிட்டு 3 ஆண்டுகள் காத்திருந்தாலும், பயிரிடப்படும் போதே ஊடு பயிராக மணிலா விதைக்கப்பட்டு நல்ல மகசூலும் ஈட்டப்படுகிறது.

மூன்று ஆண்டுகள் கழித்து அறுவடை செய்யப்படும் சவுக்கு மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், கூடுதல் லாபம் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version