ஏறுமுகம் காணும் முருங்கைகாயின் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

முருங்கைக்காயின் விலை அதிகரித்துள்ளதால் அரவக்குறிச்சி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ 2 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 20 ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இங்கு கொள்முதல் செய்யப்படும் முருங்கைக்காய்கள் சாக்கு பைகளிலும், அட்டை பெட்டிகளிலும் அடைக்கப்பட்டு பெங்களூரு, ஐதராபாத், குருவாயூர், மும்பை, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

Exit mobile version