திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மங்கலம்புதூர் கிராமத்தில் பட்டுப்புழு உற்பத்திக்கு அடித்தளமாக விளங்கும் மல்பரி பயிர் வளர்ப்பு அதிகரித்துள்ளது. வறட்சி தாங்கும் பயிரான இதற்கு உரமாக மாட்டு சானம், தழைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் பட்டுப்புழுக்கள் வளர்க்கப்பட்டு 27 நாட்களில் பட்டு உற்பத்தி செய்கின்றனர். கிருஷ்ணகிரியில் இருந்து பட்டுப்புழு முட்டைகள் வாங்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. முறையாக பராமரித்து உற்பத்தி செய்தால் குறைந்த செலவில் எளிதாக லாபம் ஈட்டலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.