எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டம்

எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் கருத்துக்களை தெரிவிக்கும் வகையிலான ஆலோசனைக் கூட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்பதற்காக, தனி வருவாய் கோட்டாட்சியர் முகுந்தன், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் அலுவலகத்தில் இருந்தனர். இந்த கூட்டத்தில் ஒரு சில விவசாயிகள் மட்டும் தங்கள் நிலத்தை, அரசுக்கு கொடுப்பது குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துவிட்டு சென்றனர்.

Exit mobile version