இயற்கை முறையில் காய்கறிகளை விளைவித்து அவற்றை சாலையோரங்களில் கடை அமைத்து விற்பனை செய்வதால் கூடுதல் லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் விவசாயி லட்சுமி தங்கள் இரண்டு ஏக்கர் விளை நிலத்தில் கத்தரிக்காய், பாகற்காய், புடலங்காய், சுரக்காய், அவரை, பப்பாளி எலுமிச்சை, பீர்க்கங்காய் உள்ளிட்ட காய்கறிகளை இயற்கை முறையில் பயிரிட்டு வருகிறார். அவற்றை சாலை ஓரத்தில்உள்ள மரத்தின் அடியில் கடை அமைத்து விற்பனை செய்து வருகிறார். இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் மற்றும் மார்க்கெட் விலையை விட குறைவாக கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் பலர் விரும்பி வாங்கிச் செல்வதாக விவசாயி லட்சுமி மகிழ்ச்சி தெரிவித்தார்.