மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள கேரளா பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு பெரியாறு அணையின் நீர்வரத்து கடந்த 7ம் தேதி ஆயிரத்து 300 கன அடியாக என தொடங்கி படிப்படியாக 15 ஆயிரம் கனஅடி வரை உயர்ந்ததுள்ளது.
இதனால் கடந்த வியாழக்கிழமை 114 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது. இந்தநிலையில், கடந்த 2 நாட்களாக இல்லாத நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டடுள்ளது. இதனால், வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.