விவசாய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

பூ உள்ளிட்ட விவசாய பொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்தால் விவசாயம் செழிக்கும் என்று ஆத்தூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது கோம்பை பகுதி. சிறுமலை அடிவாரத்தில் உள்ள இங்கு விவசாயிகள் பூ, திராட்சை, அவரை, மாதுளை உள்ளிட்ட பல்வேறு விவசாய பொருட்களை விளைவிக்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், செவ்வந்தி, செண்டுமல்லி, மல்லிகைப்பூ உள்ளிட்ட பூக்கள் கருகுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இடைத்தரகர்களின் பிரச்சனையால் உரிய விலை கிடைக்காமல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதை தடுக்க விவசாய பொருட்களை அரசே கொள்முதல் செய்தால் விவசாயம் செழிப்பதோடு விவசாயிகளும் நலம் பெறுவார்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version