தரம் குறைந்த வெளிமாநில பருத்தி விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, ஈரோடு மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அந்தியூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்துவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு கிலோ 55 ரூபாயில் இருந்து 65 ரூபாய் வரை விற்பனையான பருத்தி இந்த ஆண்டு அதிக பட்சமாக 53 ரூபாய்க்கும் குறைவாக விற்பனை ஆவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து தரம் குறைந்த பருத்தி விற்பனைக்காக கொண்டு வருதால், தமிழக பருத்தியை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம் எனவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.