மரவள்ளி கிழங்கிற்கு நிரந்தர கொள்முதல் விலை அறிவிக்க, தமிழக அரசுக்கு தருமபுரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் தாளநத்தம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் மரவள்ளிக் கிழங்கு விவசாயம் செய்யப்பட்டு, அறுவடை செய்யப்படுகிறது. அறுவடையின் போது வயலுக்கு நீர்ப் பாய்ச்சி பூமிக்கடியிலிருந்து கிழங்கை வெளியே எடுக்கின்றனர். போதிய நீர் இல்லாததால் அறுவடை செய்ய ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் போதிய லாபமின்றி, கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.