குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

மழைக் காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும், குளங்களை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு தமிழக அரசு இரண்டு வகைகளில் குளங்களை தூர்வார அனுமதித்தது. குடிமராமத்து என்ற திட்டத்தின் கீழ், அரசு 50 க்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாரியது. அதைப் போன்று, எந்த விவசாயிகள் வேண்டும் என்றாலும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து பயன்படுத்தலாம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் வாயிலாக சுமார் 300க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக தூர்வாரப்பட்டன. இதேபோன்று, இந்த ஆண்டும் மழை நீரை சேமிக்கும் வண்ணம், குளங்களை முன்கூட்டியே தூர்வார வேண்டும் என்று விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version