திருவாரூர் மாவட்டம், கண்டிரமாணிக்கம் பகுதியில் உள்ள அரசு நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டிரமாணிக்கத்தில் உள்ள நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், குச்சிபாளையம், பிலாவடி உள்ளிட்ட 8 கிராமங்களில் பயிராகும் நெல்மணிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது குறுவை சாகுபடி நெல்மணிகளை விவசாயிகள் கொண்டுவந்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், 1 கிலோமீட்டர் அளவுக்கு சாலைகளில் நெல்மணிகளை கொட்டி வைத்துள்ளனர்.
இவை மழையால் பாதிக்கப்படுவதால் விரைந்து நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை வைக்கும் விவசாயிகள், பல இடங்களில் திமுகவினரின் மூலமாக தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.