கொப்பரைத் தேங்காய் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

கொப்பரைத் தேங்காய் விலையை கிலோ ஒன்றுக்கு 110 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, சுற்றுவட்டாரப்பகுதிகளில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், உற்பத்திக்கான செலவு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள் அதற்கான விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை 110 ரூபாயாக நிர்ணயம் செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்படும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version