சாமந்தி பூக்களுக்கு பதிலாக பூர்ணிமா பூக்களை பயிரிடும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக பனிப்பொழிவு காரணமாக பூர்ணிமா பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளதால் நல்ல லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தாண்டு பருவமழை பொய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சாமந்தி பூ நாற்றுக்களுக்கு பதிலாக தண்ணீர் குறைவாக தேவைப்படும் புதுவகையான பூர்ணிமா எனப்படும் பூ நாற்றுகளை பயிரிட்டுள்ளனர். பனிப்பொழிவுக்கு ஏற்ற பூ இது என்பதால் எந்தாண்டும் இல்லாததை விட இந்த ஆண்டு பூக்களின் விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சாமந்தி பூக்களுக்கு பதிலாக பூர்ணிமா பூக்களை பயிரிட்டதால் நல்ல லாபம் கிடைத்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Exit mobile version