மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி, டெல்லி அதிவிரைவுச் சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் இன்று 100வது நாளை எட்டியதை அடுத்து டெல்லி-அரியானாவை இணைக்கும் குண்ட்லி – மனேசர், பல்வால் அதிவிரைவுச் சாலையை 5 மணிநேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அப்போது அந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.