தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உரிய விலை கிடைக்காததால் தக்காளிகள் செடிகளிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை, சிறுமுகை,சிட்டேப்பாளையம் உள்ளிட்டப்பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த முறை ஒருபெட்டி தக்காளி 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது 50 ரூபாக்கு மட்டுமே விலைபோகிறது. இதனால் போக்குவரத்து செலவிற்கு கூட போதுமானதாக இல்லை என்பதால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். தக்காளிக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Exit mobile version